பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் நிலக்கோட்டைக் குழு மாணவர்கள் சார்பாக, விவசாயிகளுக்கான இரண்டு நாட்கள் கருத்தரங்கக் கூட்டம் திண்டுக்கல் காய்கறி மகத்துவ மையத்தில் நடைபெற்றது.
அப்போது, இந்த மாணவர்கள், குழித்தட்டு நாற்றங்கால் தயாரிப்புத் தொழில் நுட்பத்தை, விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் எடுத்துக் கூறினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தோட்டக்கலை கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் சுந்தர் ஐயா சிறப்புரை ஆற்றினார்.
இந்தக் கூட்டத்தில், திண்டுக்கல் தோட்டக்கலைத் துணை இயக்குநர், சாத்தூர் மற்றும் ரெட்டியார் சத்திரம் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண் பெருங்குடிகள் பலர் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மு.உமாபதி