பொள்ளாச்சியில் சிறப்பாக நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி 2023

பொள்ளாச்சி IMG 3843photo scaled

ச்சை பூமி சார்பில், இரண்டாம் முறையாகப் பொள்ளாச்சியில், பிப்ரவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் மாபெரும் விவசாயக் கண்காட்சி, சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டது. மூன்று நாட்களும் பல்லாயிரம் விவசாயிகள் வந்து இந்தக் கண்காட்சியைப் பார்த்துப் பயனடைந்தனர்.

+ இந்தக் கண்காட்சியில், டிராக்டர் நிறுவனங்கள் அரங்குகளை அமைத்து இருந்தன.

+ ரொட்டோவேட்டர் போன்ற உழவுக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்று இருந்தன.

+ தென்னை மட்டை, தென்னையோலைத் தூளாக நொறுக்கி உரமாக, தீவனமாக மாற்றுவதற்கு உதவும் இயந்திரங்கள் அடங்கிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

+ சூரிய மின்சாரத்தில் இயங்கும் கருவிகள் அடங்கிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

+ விவசாய வேலைகளுக்குத் தேவையான அரிவாள், மண்வெட்டி, கொத்து உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் நிறைந்த அரங்குகள் இருந்தன.

+ பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் விழிப்புணர்வை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அடையும் வகையிலான அரங்கு இடம் பெற்று இருந்தது.

+ வாழை போன்ற பயிர்களில் இருந்து கிடைக்கும் கழிவை, பயன்மிகு பொருள்களாக மாற்றவும் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வகை செய்யும் அரங்கு இந்தக் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது.

+ வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்கத் தேவைப்படும் நாட்டு விதைகள், நவீன விதைகள் மற்றும் இடுபொருள்கள் நிறைந்த அரங்குகள் இருந்தன.

+ மண்ணையும் காத்து, மனித நலத்தையும் காக்கும் இயற்கை வேளாண்மைக்கு உதவும், இயற்கை உரங்கள் நிறைந்த அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

+ பயிர்களைக் காக்க உதவும், நவீனச் சூரிய மின்வேலி மற்றும் கம்பிவேலி தயாரிப்பு நிறுவனங்கள் அரங்குகளை அமைத்திருந்தன.

+ எளிய வகையில் உடல் நலம் காக்கும் மூலிகை மருத்துவப் பொருள்கள் நிறைந்த அரங்குகள் இருந்தன.

+ தென்னை, மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, பலா, மாதுளை போன்ற பழமரக் கன்றுகள், தேக்கு, சந்தனம், மகாகனி போன்ற பணமதிப்புள்ள மரக்கன்றுகள் அடங்கிய நாற்றுப் பண்ணைகளின் அரங்குகள் இடம் பெற்று இருந்தன.

+ அரசு நலத்திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

+ கண்காட்சியில், பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 15 பேர், தன்னார்வலர்களாகப் பணியாற்றினர். அவர்களுக்குப் பச்சை பூமியின் பாராட்டுச் சான்றிதழை, பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பொ.முருகானந்தம் வழங்கினார்.

+ இந்தக் கண்காட்சியில் சிற்றுண்டி மற்றும் உணவு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.

+ மொத்தத்தில், ஏராளமான அரங்குகளுடன், எந்தக் குறையும் இல்லாமல், கண்காட்சியில் பங்கேற்ற அனைவரும் மனநிறைவைப் பெறும் வகையில், இந்தக் கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தது.


பச்சை பூமி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading