பச்சை பூமி வேளாண் மாணவர்கள் வளர்ச்சித் திட்டம்!

மாணவர்கள் Agri students

ச்சை பூமி செம்மைத் தமிழில் வெளிவரும் முன்னணி வேளாண் மாத இதழ். இதில், இயற்கை வேளாண்மை, நவீன வேளாண்மை, ஆடு மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, சுற்றுச்சூழல், அரசு திட்டங்கள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. இதன் ஊடக வடிவமான www.pachaiboomi.in இல், பதிவேற்றம் செய்யப்படும் இணைய இதழின் சந்தாதாரர்களாக வேளாண் மாணவர்கள் ஆகலாம்.

இந்தத் திட்டம், வேளாண் கல்லூரிகள் மட்டுமின்றி, கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மீன்வளக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பொருந்தும். திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து நான்கு ஆண்டுகள் முடிய இதில் பயணிக்கலாம். ஏற்கெனவே படித்துக் கொண்டிருப்பவர்களும் இதில் சேர முடியும். 

திட்டத்தின் பயன்கள்
சந்தாதாரர் சான்றிதழ்

பச்சை பூமியின் இணைய இதழ் சந்தாதாரர்களாகச் சேரும் மாணவர்களுக்குச் சந்தாதாரர் சான்றிதழ் வழங்கப்படும். இது, அடுத்தடுத்த நகர்வுகளில் உங்களின் கல்விச் சான்றிதழ்களுடன் கூடுதல் தகுதியாக அமையும். இணைய இதழ் சாந்தாதாரர்களாக ஆவதன் மூலம், வேளாண்மை சார்ந்த எண்ணற்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம். பிற துறைகள் சார்ந்த தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பகுதிநேர நிருபர்

விருப்பமுள்ள மாணவர்கள் சிறந்த உழவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் அனுபவங்களைச் செய்தியாக்கி அனுப்பும், பகுதிநேர நிருபர் பணியைச் செய்யலாம். இதில் ஈடுபடும் மாணவர்களுக்குப் பச்சை பூமியின் பகுதிநேர நிருபர் அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்.

மேலும், நான்கு ஆண்டுகள் கொண்ட இத்திட்டத்தில் தொடருவதன் மூலம், ஆண்டு அடிப்படையில், முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் நிறைவு நிலை நிருபர் சான்றிதழ் வழங்கப்படும்.

இணையப் பயிற்சி

பகுதிநேர நிருபர்களாகச் செயல்படும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், இணையவழிப் பயிற்சிகள் அவ்வப்போது வழங்கப்படும். இதன் மூலம், தகவல்களைத் திறமையாக வெளிப்படுத்தும் ஆற்றலை மாணவர்கள் பெற முடியும்.

புத்தாக்கப் பயிற்சி

ஒருநாள் வீதம் ஆண்டுக்கு இருமுறை, கலை, வாழ்வியல் சார்ந்த புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி இனிதாகப் பொழுதைக் கழிக்கும் வகையிலும், நல்ல சிந்தனைகளைத் தூண்டும் வகையிலும் அமையும். இதனால் உடல் பலம், மனபலத்துடன் இயங்கும் ஆற்றலைப் பெற முடியும். அத்துடன், இந்நிகழ்வில், மாணவர்கள் தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தவும் நேரம் ஒதுக்கப்படும்.

மொத்தத்தில் மாணவர்கள், தங்களைத் திறமைசாலிகளாக வளர்த்துக் கொள்வதற்கான அரிய வாய்ப்பு, இந்த பச்சை பூமியின் வேளாண் மாணவர்கள் வளர்ச்சித் திட்டம்!

மேலும் விவரங்களுக்கு:

+91 90430 82900, pachaiboomi@live.com

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading